Home இலங்கை சமூகம் றீ(ச்)ஷாவின் புதிய முயற்சி: கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்க திட்டம்

றீ(ச்)ஷாவின் புதிய முயற்சி: கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்க திட்டம்

0

றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையின் மற்றுமொரு முயற்சியாக கல்விப்பாசறை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்விப் பாசறையின் திறப்பு விழாவானது இன்று(16) இடம்பெற்றுள்ளது.

இயக்கச்சி பகுதியிலுள்ள மாணவர்களின் நன்மை கருதி இலவசமான முறையில் தரம் 5 தொடக்கம் 11 வரையான மாணவர்களுக்கு மாலைநேர வகுப்புக்கள் றீ(ச்)ஷாவின் கல்விப்பாசறையில் இடம்பெறும்.

இந்த திறப்பு விழாவில் கலந்துகொண்ட றீ(ச்)ஷாவின் ஸ்தாபகர் கந்தையா பாஸ்கரனின் மகன் றீ(ச்)ஷாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய முயற்சிகள் குறித்து பெருமிதம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது தந்தையின் முயற்சிகளை பாராட்டியதுடன் அதனை வளர்ச்சியடைய செய்வேன் எனவும் உறுதியளித்துள்ளார்.

தமிழ் மக்களுக்காக நிற்பேன் என கூறியதோடு பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பாமல் இந்த நாட்டிலே படிக்க வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

https://www.youtube.com/embed/HCNVe5zDH1k

NO COMMENTS

Exit mobile version