Home இலங்கை சமூகம் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை! மீறப்படும் ரணிலின் வாக்குறுதி

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை! மீறப்படும் ரணிலின் வாக்குறுதி

0

இலங்கையில் உள்ள தோட்டத்தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,200 ரூபாவை மாத்திரமே வழங்க முடியும் என இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் (Lionel Herath) தெரிவித்துள்ளார். 

அத்துடன், மேலதிக தேயிலை கிலோவொன்றுக்கு 65 ரூபாய் செலுத்துவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

தென்னிலைங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

சம்பள அதிகரிப்பு 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “முன்னர் 1,000 ரூபாவாக காணப்பட்ட வேதனத்தை 1,700 ரூபாவாக அதிகரிப்பதன் ஊடாக 70 சதவீதம் சம்பள அதிகரிப்பு இடம்பெறும்.

தொழிற்துறையில் உள்ளவர்கள் தங்கள் சம்பளத்தை அதிகரிக்குமாறு எந்தவித ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை.

முழுமையாக அரசியல் நோக்கத்திற்காக இந்த செயற்பாடு இடம்பெறுகிறது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஓரளவு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவது நியாயமான விடயமாக கருத முடியும்.

தேர்தலே இலக்கு 

எனினும் 1,700 ரூபாவாக சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்துவதனை ஏற்றுக் கொள்ள முடியாது. 

தேர்தல் ஒன்றை இலக்கு வைத்தே அரசாங்கம் இவ்வாறான கோரிக்கையை முன்வைக்கின்றது.

இதற்கு முன்னரே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் கேள்வி எழுப்பியிருக்க முடியும்.

வீழ்ச்சியடையும் தேயிலை தொழிற்துறை

இந்த நிலையில், தொழிற்துறைக்கு அமைய நாளாந்த சம்பளமாக 1,200 ரூபாய் மாத்திரமே செலுத்த முடியும்.

அதேநேரம், நீதிமன்றம் உத்தரவிடுமாயின் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு நாளாந்தம் 1,700 ரூபாய் சம்பளத்தை செலுத்த நேரிடும்.

எனினும், அதனைத் தொடர்ந்து தேயிலை தொழிற்துறையும் வீழ்ச்சியடையும்” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version