பாடசாலை மாணவர்களுக்கான எழுதுபொருட்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்ட வவுச்சரின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கல்வி அமைச்சு, பாடசாலை மாணவர்களுக்கு அறிவித்துள்ளது.
6000 ரூபா பெறுமதியான குறித்த வவுச்சரின் செல்லுபடியாகும் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
கால நீடிப்பு
அதன்படி, இம்மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த அதன் செல்லுபடியாகும் காலம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
