2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் (G.C.E. A/L exam) நடைபெற்று முடிந்த பாடங்களுக்கான விடைத்தாள்களுக்கு வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே (Indika Kumari Liyanage) தெரிவித்துள்ளார்.
அத்துடன் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சை தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் பரீட்சை திணைக்ளத்திற்கு அறிவிக்க முடியும் இலங்கை பரீட்சைத் திணைக்களம் (Doe) அறிவித்துள்ளது.
அவசர தொலைபேசி இலக்கம்
அதன்படி, பரீட்சைத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 அல்லது 0112 78 45 37, 0112 78 66 16 மற்றும் 0112 78 42 08 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, 0112 78 44 22 என்ற தொலைநகல் இலக்கம் மூலமாகவும், பரீட்சைத் திணைக்களத்தின் gcealexam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் இது குறித்து அறிவிக்க முடியும் என்று பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்கள் 2026 ஜனவரி 12 முதல் 20 வரை நடத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அண்மையில் அறிவித்தது.
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நடைபெற்று வந்த உயர் தரப் பரீட்சை அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
