பாலர் பாடசாலைகள் தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ்
இயங்கும் ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டுக்கான தேசிய செயலகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பாதுகாப்பானதாகக் கருதப்படும் அனைத்து பாலர் பாடசாலைகளும் ஆரம்பகால
குழந்தைப் பருவ மேம்பாட்டு மையங்களும் டிசம்பர் 16 முதல் மீண்டும்
திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் சூழ்நிலை
அவசரகால பேரிடர் சூழ்நிலை காரணமாக இந்த மையங்கள் அண்மையில் மூடப்பட்டன.
இந்தநிலையில் குழந்தைகள் மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக
பாதுகாப்பு மதிப்பீடுகள் முடிந்த பின்னர், அவற்றை திறக்கும் தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது.
