லியோனல் மெஸ்ஸி தனது “G.O.A.T இந்தியா டூர் 2025” இன் ஒரு பகுதியாக டிசம்பர் 13 அன்று ஹைதராபாத் மாநிலத்துக்கு செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகள் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, மெஸ்ஸி ஹைதராபாத் உப்பல் ஸ்டேடியத்தில் நடைபெறும் 7-பேர் கொண்ட நட்பு போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
இந்திய பயண அட்டவணை
இதில் பல முக்கிய திரைப்பட கலைஞர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், உயர்மட்ட தரப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெஸ்ஸியின் இந்திய பயண அட்டவணையின்படி டிசம்பர் 13 ஆம் திகதி காலை கொல்கத்தாவில் தரையிறங்கும் போது ஆரம்பமாகவுள்ளது.
ஹைதராபாத்தில் நடைபெறும் நட்பு போட்டிக்குப் பிறகு, இளம் கால்பந்து வீரர்களுக்கான பிரத்தியேகமான கலந்துரையாடலை மெஸ்ஸி நடத்தவுள்ளார்.
ஹைதராபாத்திற்குப் பிறகு, மெஸ்ஸி மும்பைக்குச் செல்வார் என்றும், அங்கு அவர் பிரபலங்களைச் சந்திப்பார் மற்றும் ஒரு தொண்டு நிகழ்வில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10இலட்சம் கட்டணம்
இறுதியாக அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், லியோனல் மெஸ்ஸியுடன் ரசிகர்கள் சிறப்பு புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஒரு புகைப்படத்திற்கு ரூ. 10இலட்சம் கட்டணமாக(இந்திய மதிப்பு) நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
இது மெஸ்ஸியின் இரண்டாவது இந்திய வருகையாகும், முதன்முறையாக 2011 இல் கொல்கத்தாவில் வெனிசுலாவுக்கு எதிரான நட்பு போட்டிக்காக வருகை தந்தார்.
