Home இலங்கை கல்வி இயக்கச்சியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் கல்விப்பாசறை

இயக்கச்சியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் கல்விப்பாசறை

0

இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையின் புதிய முயற்சியாக அண்மையில் கல்விப்பாசறை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு, தரம் 5 தொடக்கம் 11 வரையான மாணவர்களிற்கு மாலை நேர வகுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், குறித்த கல்விப் பாசறையானது தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஏராளமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

நவீன வசதி

இந்த கல்விப்பாசறையில் குறிப்பாக நவீன வசதிகளுடைய வகுப்பறைகளில் மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இதில் அப்பகுதியிலுள்ள மாணவர்கள் மட்டுமன்றி கிளிநொச்சி முழுவதிலுமிருந்து ஏராளமான மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டு பயனடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/educational-program-successfully-ree-cha-1721048324

NO COMMENTS

Exit mobile version