Home இலங்கை சமூகம் ஈழத்தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட திரைப்படைப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஈழத்தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட திரைப்படைப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

உலகம் முழுவதும் சிதறி வாழும் ஈழத் தமிழர்களின் வாழ்க்கையும், போராட்ட வரலாறும், தற்போது பிரான்சில் (France) உருவாகியுள்ள ஒரு புதிய திரைப்படம் மூலம் சிதைவடைந்து விடும் அபாயத்தில் உள்ளதாக ஈழத் தமிழ் திரைப்படச் சங்கம் எச்சரித்துள்ளது.

“ஈழம் – லிற்றில் ஜப்னா” என்ற பெயரில், Mean Streets தயாரிப்பு மற்றும் இளம் இயக்குநர் லோறன்ஸ் வாலின் என்பவரின் நெறிப்படுத்துதலில் உருவான இத்திரைப்படம், ஏப்ரல் மாத இறுதியில் பிரான்ஸ் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

இந்த திரைப்படம், புலம் பெயர் ஈழத்தமிழர் வாழ்க்கையையும், வரலாற்றையும் புனைவுகள் மற்றும் பிழைகள் நிறைந்த முறையில் சித்தரிக்கிறது.

திரைப்பட சங்கம்

இது நம் இளம் சமூகம் மற்றும் பிற இன மக்களிடம் தவறான எண்ணங்களை விதைக்கும் அபாயம் உள்ளதாகவும், திரைப்பட சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

சமூகநிலை, அரசியல் சூழ்நிலை மற்றும் வாழ்வியலை மிகத் தீவிரமாக மாற்றி அமைத்து காட்டும் முயற்சியாகவும், ஈழத்தமிழர் சமூகத்தை தவறாக பிரதிநிதித்துவப்படுத்தும் முயற்சியாகவும் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்டுகிறது.

அந்த வகையில் வகையில், பிரான்சில் உள்ள அனைத்து தமிழ்க் கட்டமைப்புகளையும், சமூக ஆர்வலர்களையும் ஒன்றிணைத்து, ஒரு அவசரமான கலந்துரையாடல் நடத்தப்படும் என ஈழத் தமிழ் திரைப்படச் சங்கம் அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version