Home முக்கியச் செய்திகள் குறைக்கப்படவுள்ள முட்டை விலை: உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு

குறைக்கப்படவுள்ள முட்டை விலை: உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு

0
புதிய இணைப்பு

எதிர்காலத்தில் முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 45 வரை குறைக்க முடியும் என உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் அதிகப்படியான முட்டை உற்பத்தி கிடைப்பதால் முட்டையின் விலை மேலும் குறையும் என அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை முட்டை சந்தையில் 35 ரூபாய் முதல் 48 ரூபாய் வரை முட்டையை நுகர்வோர் வாங்குகின்றனர் என்றும் முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு : வெளியான தகவல்

முதலாம் இணைப்பு

நாட்டில் தினசரி முட்டை நுகர்வு சுமார் எட்டு மில்லியனாக அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், தினசரி முட்டை நுகர்வு ஏழு மில்லியன் என்று நுகர்வோர் தரவு அறிக்கைகள் குறிப்பிட்டாலும் கடந்த சில மாதங்களில் குறித்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நாளாந்த முட்டை உற்பத்தி சுமார் ஆறு மில்லியனாக உள்ளதுடன் தேவைக்கும் மற்றும் வழங்கலுக்கும் இடையில் சுமார் இரண்டு மில்லியன் முட்டைகளின் பற்றாக்குறை காரணமாக நாட்டின் முட்டை சந்தையில் கேள்வி நிலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் கல்வித் தளம்

முட்டை இறக்குமதி

அத்தோடு, முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதன் ஊடாக இலங்கை சந்தையில் முட்டை விலை வேகமாக அதிகரித்து வருவதற்கும் இதுவே காரணம் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தப் பின்னணியில் கோழி குஞ்சுகளின் வருடாந்தத் தேவை 44,000 முட்டைகளால் அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்எம்பிஆர் அழககோன் தெரிவித்துள்ளார்.

ரணிலை கடவுளாக்கிய நபர் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

உற்பத்தியாளர்கள் சங்கம் 

இதனடிப்படையில், கடந்த வருடங்களில் இந்தத் தேவை சுமார் 80,000 ஆக இருந்தது என்றும்  இந்த ஆண்டு 122,000 குஞ்சுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரான்ஸ் (France), அமெரிக்கா (America), இந்தியா (India) மற்றும் பிரேசில் (Brazil) ஆகிய நாடுகளில் இருந்து தாய் கோழி குஞ்சுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறைக்கப்படவுள்ள மின் கட்டண தொகை: வெளியான மகிழ்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

NO COMMENTS

Exit mobile version