Home இலங்கை சமூகம் முட்டை விலையில் தொடர் மாற்றம் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

முட்டை விலையில் தொடர் மாற்றம் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0

சந்தையில் முட்டை விநியோகம் தடைப்பட்டாலோ அல்லது மொத்த முட்டை விநியோக நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபையின் ( Consumer Affairs Authority) தகவல் பிரிவின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சுற்றி வளைப்புக்களைத் துரிதப்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

விலை சூத்திரம்

இந்தநிலையில், முட்டை விலையை நிர்ணயம் செய்ய விலை சூத்திரம் கொண்டு வர வேண்டும் என முட்டை வர்த்தக சங்கங்கள் அரசுக்கு விடுத்துள்ளன.

அத்துடன், முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவைத் தாண்டிய போதிலும் அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என விவசாய அமைச்சின் (Ministry of Agriculture of Sri Lanka) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

அத்தோடு, முட்டையின் விலை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மக்கள் விசனம்

இவ்வாறு, முட்டை விலை அதிகரிப்பு தொடர்பில் பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இது குறித்து மக்களும் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், அண்மைய நாட்களில் 28 ரூபாய் முதல் 32 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 40 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version