Home இலங்கை சமூகம் முதலை தாக்கி வயோதிப பெண் பரிதாபமாக உயிரிழிப்பு

முதலை தாக்கி வயோதிப பெண் பரிதாபமாக உயிரிழிப்பு

0

வவுனியாவில் (Vavuniya) முதலை தாக்கியதில் வயோதிப பெண் ஒருவர்
பலியாகியுள்ளதாக உலுக்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (21) மாடுகளை மேய்ப்பதற்காக பாவற்குளம் – சூடுவெந்தபுலவு பகுதிக்கு
சென்ற வேளை அப்பகுதியில் காணப்பட்ட ஆற்றுப்பகுதியில் இறங்கிய போதே முதலையின்
தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

மேலதிக விசாரணை

இச்சம்பவத்தில் சூடுவெந்தபுலவினை சேர்ந்தமூன்று பிள்ளைகளின் தாயான 67 வயதுடைய
ஆதம்பாவா முசிறியா என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உலுக்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை நாட்டில் அண்மைக்காலமாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version