Home இலங்கை அரசியல் பதுளையில் ஆரம்பமான வாக்குப்பெட்டி விநியோகம்

பதுளையில் ஆரம்பமான வாக்குப்பெட்டி விநியோகம்

0

பதுளை (Badulla) மாவட்டத்தில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

வாக்குப் பெட்டிகள் அனைத்தும் பதுளை மத்திய மகா வித்தியாலயம் மற்றும் தர்மதூத
சிங்கள மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து வாக்குசாவடிகளுக்கு காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 530 வாக்களிப்பு நிலையங்களில் 705,772 பேர் வாக்களிக்க
தகுதி பெற்றுள்ளனர்.

வாக்களிப்பு நிலையங்கள்

பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை, வியழுவ, பசறை, பதுளை, ஹலிஎல, ஊவாபரணகம,
வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தளை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு
நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

மேலும், பதுளை மாவட்டத்தில் 69 வாக்கு எண்ணும்
நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் வாக்களிப்பு நிலையங்களில் 10,000 அரச அதிகாரிகள்  கடமையில்
ஈடுபட்டுள்ளதோடு, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 3,000 காவல்துறையினரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்திற்கான 09 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 15
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 05 சுயேட்சை குழுக்களை
பிரதிநிதித்துவப்படுத்தி 240 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version