ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரசியல்மட்டத் தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ரணிலின் பாசறையில் இருந்து விலகி, மீண்டும் நாமலுடன் இணைந்து செயற்பட பலர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கட்சியை விட்டு வெளியேறிய பலர் நாமலை தொடர்பு கொண்டு தமது மீள்ளிணைவு குறித்து அறிவித்துள்ளனர்.
தேர்தல் களம்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நாமல் ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் பல பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டிருந்த போது பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் தமக்கு மீண்டும் ஆதரவளித்தால் சுயேட்சை உறுப்பினர்களாக இணைந்து கொள்ளுமாறு நாமல் தெரிவித்துள்ளார்.
மும்முனை போட்டி
இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் மும்முனை போட்டியாகவே அது மாறியுள்ளது. நாமல் போட்டி நிலைக்கு அப்பால் உள்ளமை குறிப்பிடத்தக்கது.