Home இலங்கை அரசியல் தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பம்: களத்தில் குதித்த பிரதான வேட்பாளர்கள்

தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பம்: களத்தில் குதித்த பிரதான வேட்பாளர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் சிலர் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பிரசாரங்கள் இன்று(17) முதல் ஆரம்பமாகவுள்ளன.

சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஏற்பாடு செய்யப்பட்ட ஆரம்பக்கட்ட பேரணி இன்று அனுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம்

மேலும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க இன்று தென் மாகாணத்தில் தனது ஆரம்பக் கூட்டங்களை ஆரம்பிக்கவுள்ளார்.

அனைத்து மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தேர்தல் பிரசார பேரணி இன்று யாழ்ப்பாணம் நடைபெறவுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரம் இன்று கம்பஹாவில் ஆரம்பமாகவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version