Home இலங்கை அரசியல் தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டு

தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டு

0

 தேர்தல் ஆணைக்கழு அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பில் பங்கேற்றதன் பின்னர் அவர் ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினர் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு மிக மந்த கதியில் செயற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் வெற்றியீட்டும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என ஜனாதிபதி கூறிய விடயம் உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலைமை மிகவும் கவலையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் பிரசார கண்காணிப்பு பணிகளை தேர்தல் ஆணைக்குழுவும் உரிய நிறுவனங்களும் சரியான முறையில் மேற்கொள்ளவில்லை என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்வதாகத் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு அரச துறைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக சம்பிக் ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

பாதாள உலகக் குழு செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version