Home இலங்கை அரசியல் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றியீட்டும் – நளிந்த

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றியீட்டும் – நளிந்த

0

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றியீட்டும் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைந்தாலும் ஆளும் கட்சி வெற்றியீட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் வாக்களிப்பு

கடந்த நான்கரை மாதங்களில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய சேவை தொடர்பில் மக்களுக்கு நல்ல தெளிவு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது, நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது எனவும் உலக நாடுகள் மத்தியில் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களிடம் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு போலியான குற்றச்சாட்டுக்களையும் சேறு பூசல்களையும் செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் நல்ல பாடம் கற்பிப்பார்கள் என்பதில் ஐயமில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version