Home இலங்கை அரசியல் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டம்

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டம்

0

தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் வியாழக்கிழமை விசேட கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் நடத்துவது தொடர்பிலும், அதற்கான திகதியை நிர்ணயிப்பது தொடர்பிலும் இந்த கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தமானி அறிவித்தல்

மேலும் ஜனாதிபதி தேர்தல் தினம் தொடர்பிலும் அறிவிக்கப்படக்கூடிய சாத்தியம் உண்டு என கூறப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் இந்த வார இறுதிக்குள் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/election-commesion-coven-for-meeting-1721743755

NO COMMENTS

Exit mobile version