Home இலங்கை சமூகம் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

0

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களின் இடது கை சிறு விரலில் தோதான குறியீடு இடப்பட்டுள்ளமையால், உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 53அ (3) ஆம் பிரிவின் பிரகாரம் 2024.10.26ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச தேர்தலின் போது வாக்காளரின் இடது கைப்பெருவிரலில் தோதான குறியீட்டினால் அடையாளமிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வாக்காளரின் இடது கையில் பெருவிரல் இல்லாதிருக்கும் பட்சத்தில், அவரது வலது கையில் உள்ள வேறேதெனுமொரு விரல் தோதான குறியீட்டினால் அடையாளமிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 10 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 02 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்திய போதும் அவற்றில், அங்கீகரிக்கப்பட்ட 08 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழு மாத்திரமே தமது வேட்புமனுக்களை சமர்ப்பித்திருந்தன.

இதன்படி, எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.  

எல்பிட்டிய பிரதேச சபையின் பதவிக்காலம், 2019 நவம்பர் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், நான்காவது தடவையாக வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, 06 மார்ச் 2024 இல் முடிவடைந்தது.

இதற்கமைய, நான்காவது தடவையாக வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதால், உள்ளூராட்சி சபை சட்டத்தின் பிரகாரம், விசேட ஆணையாளர் பொறுப்பேற்றிருந்தார்.

இந்நிலையில், எல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நவம்பர் 04, 2024 வரை நீடித்து விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்,

NO COMMENTS

Exit mobile version