ஜனாதிபதி தேர்தலின் பின்னரே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான வழக்கு அண்மையில் இடம்பெற்றது.அதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை விரைவில் நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய, நீதிமன்றின் இந்த தீர்ப்பு குறித்து அடுத்த வாரம் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க (
R.M.A.L Ratnayake) தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த சிலர் தற்போது உயிரிழந்துள்ளனர்.
சில வேட்பாளர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும், பல வேட்பாளர்கள் அரசியலில் இருந்து விலகியுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும், உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 3,000 அரசு ஊழியர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.