உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 22 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள்
அத்துடன், தேர்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் தொடர்பிலும் 3 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியினுள் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
