வாக்களிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, நாடாளுமன்ற தேர்தல் செயற்பாடுகள் அனைத்தும் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு செயற்பாடுகள்
அத்தோடு, வாக்களிப்பு செயற்பாடுகளில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் தொடர்பில் கடமையாற்றும் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அசங்க கரகொட அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இதுபோன்ற தவறான செய்திகளையும் வதந்திகளையும் பிரசாரம் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டடுள்ளார்.
மக்கள் அவதானம்
தேர்தல் அமைதியான முறையில் இடம்பெறுவதனூடாக அசௌகரியத்துக்குள்ளாகும் தரப்பினர் முழு நாட்டையும் அசௌரியத்துக்குள்ளாக்கும் வகையில் இதுபோன்ற தவறான தகவல்களை வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அவ்வாறான கருத்துகள் குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.