Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலுக்கான செலவுக்கணக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள்: ஜனாதிபதியும் உள்ளடக்கம்

ஜனாதிபதி தேர்தலுக்கான செலவுக்கணக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள்: ஜனாதிபதியும் உள்ளடக்கம்

0

கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் இதுவரை தங்கள் செலவுக்கணக்கை தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலின் ​போது 39 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் ஒரு வேட்பாளருக்கு 109 ரூபா வீதம் செலவழிக்கும் வகையில் பிரசார செலவுக்கான உச்சவரம்பு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

 

அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட 34 வேட்பாளர்கள் 

அத்துடன் ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் செலவுக் கணக்கை தேர்தல் முடிந்தவுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழு நிபந்தனை விதித்திருந்தது.

இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட 34 வேட்பாளர்கள் இதுவரை தங்கள் செலவுக்கணக்கை சமர்ப்பிக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அவ்வாறாக தங்கள் செலவுக் கணக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) க்கு முன்னர் தங்கள் செலவுக் கணக்கை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

 

 

NO COMMENTS

Exit mobile version