ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவின் பின்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதியை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தல்
இதேவேளை, இன்றைய தினம் ஆணைக்குழுவின் தலைவர் தலைமையில் தேர்தல் ஆணைக்குழுவில் விசேட ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் அதிகாரிகள் நாளைய தினம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.