Home முக்கியச் செய்திகள் அதிபர் தேர்தல் குறித்து விமல் வீரவன்ச மனு தாக்கல்

அதிபர் தேர்தல் குறித்து விமல் வீரவன்ச மனு தாக்கல்

0

அதிபர் தேர்தலை (Presidential Election) ஒத்திவைக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நிராகரிக்குமாறு இடைக்கால மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச (Wimal Weeravansa) இந்த இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை குறித்த இடைக்கால மனு இன்று (08) உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடைக்கால மனு

அந்தவகையில், 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது, ​​அதிபரின் பதவிக் காலத்தை 5 வருடங்களாக மட்டுப்படுத்துவதே நாடாளுமன்றத்தின் நோக்கமாக இருந்தது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சட்டத்தரணி நிஷான் பிரமித்திரத்ன, சட்டத்தரணி கமிது கருணாசேன, ஷெனாலி டயஸ், நிமாஷி பெர்னாண்டோ உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினால் அதிபர் தேர்தலை ஒத்திவைக்கும் மனுவை நிராகரிக்குமாறு கோரி இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version