Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு வெளியான அறிவிப்பு

0

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு, தங்களது தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடையவுள்ளது.

நாளை பிற்பகல் 3 மணியுடன் கால அவகாசம் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.

இதுவரையில் 8 பேர் மாத்திரமே தங்களது செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலவு அறிக்கை

செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான 21 நாட்களுக்குள் அது தொடர்பான அறிக்கையை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு 38 வேட்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் ஆணையத்திடம் அறிக்கைகள் வழங்கப்பட்ட பிறகு, அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும், தவறான செலவு அறிக்கைகள் இருந்தால் சரிபார்க்கக்கூடிய ஆவணங்களுடன் எந்தவொரு பொதுமகனும் காவல்துறையில் முறைப்பாடு செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.

ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு வாக்காளர் ஒருவருக்கு செலவிடும் தொகை 109 ரூபா என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.

அதன்படி, (17,140,354) வாக்காளர்களுக்கு ஒரு வேட்பாளர் பிரசாரச் செலவுக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச வரம்பு 186 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version