Home இலங்கை அரசியல் தேர்தலுக்கான தனியார் துறை ஊழியர்களின் விடுமுறை : வெளியான தகவல்

தேர்தலுக்கான தனியார் துறை ஊழியர்களின் விடுமுறை : வெளியான தகவல்

0

அனைத்து ஊழியர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka) தெரிவித்துள்ளது.

குறித்த விடயமானது நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், தனியார் துறை ஊழியர்களுக்கும் கீழ்க்கண்டவாறு தூரத்திற்கு ஏற்ப விடுமுறை அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

  1. 40 கிலோ மீற்றர் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் அரை நாள் விடுமுறை
  2. 40 – 100 கிலோ மீற்றர் வரை இருந்தால் ஒரு நாள் விடுமுறை
  3. 100 – 150 கிலோ மீற்றர் தூரம் என்றால் ஒன்றரை நாள் விடுமுறை
  4. 150 கிலோ மீற்றரிற்கு மேல் இருந்தால் இரண்டு நாட்கள் விடுமுறை

மேலும், பணியிடத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள சில வாக்காளர்களுக்கு வாக்களிக்க மூன்று நாட்கள் தேவைப்பட்டால் அதற்குத் தேவையான மூன்று நாள் விடுமுறையையும் அந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Ratnayake) தெரிவித்துள்ளார்.

விடுமுறை கோரிக்கை

அத்தோடு, பல்கலைக்கழகங்களின் பணியாட் குழுவினருக்கும் மாணவ மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இலகுபடுத்தும் வகையில் விடுமுறை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (University Grants Commission) தவிசாளர் மற்றும் அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கபட்டிருந்தாக தெரிவிக்கபட்டிருந்து.

மேலும், இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்று வெளியிட்டிருந்ததுடன் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்காவிடின் அது அடிப்படை உரிமை மீறலாகக் கருதப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிடும் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version