எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலையொட்டி ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஓய்வூதிய நன்மைகளைப் பாதுகாத்தல் என்னும் தலைப்பின் கீழ் 2016 – 2019 காலப்பகுதிக்குள் ஓய்வூதியதாரர்களுக்கு இல்லாது போன ஓய்வூதியத்தை மறுசீரமைத்து, ஓய்வூதிய முரண்பாட்டுக்கு நிலையான தீர்வை வழங்குவேன் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும், “2016ஆம் ஆண்டிற்கு முன் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு அக்ரஹா காப்புறுதியை விரிவுபடுத்தல்.
ஓய்வூதியம் பெற்ற சமூகத்திற்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில் அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கைப் பொறுப்பு நிதி முகாமைத்துவத்தை வலுப்படுத்த 1999 ஆம் ஆண்டின் 40ஆம் இலக்க அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தை திருத்துவேன்.
நீண்டகால நிலைத்தன்மை
தேசிய பாதுகாப்பிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த வீரர்களின் கௌரவத்தைப் பாதுகாத்து அவர்களின் நலனை உறுதி செய்ய 6 மாதங்களுக்குள் இராணுவ அலுவல்கள் திணைக்களம் நிறுவப்படும்.
தற்போது இராணுவ நலனுக்கு பொறுப்பாக உள்ள அனைத்து நிறுவனங்களும் இந்த துறையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும்.
இது புனர்வாழ்வு, சுகாதாரம், தொழிற்கல்வி, ஆலோசனை மற்றும் வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சேவைகளை வழங்குதல். ஓய்வு பெற்ற போர் வீரர்களுக்கு ‘One Rank-One Pension’ கொள்கையை ஏற்றுக்கொள்ளுதல்.
போர் வீரர்களின் பிரச்சினைகளைக் கேட்டு தீர்க்க சிறப்பு ஒம்புஸ்மன் ஒருவரை நியமித்தல், மற்றும் அந்த ஒம்புஸ்மன் அதிகாரியிடமிருந்து பெறப்படும் பரிந்துரைகளை 6 மாதங்களுக்குள் செயற்படுத்துதல்.
வலுவான சமூக பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்குதல் நீண்டகால நிலைத்தன்மைக்காக, இலங்கையின் ஓய்வூதிய முறையை முற்றிலும் மறுசீரமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.