Home இலங்கை அரசியல் தேர்தல் ஆட்சேபனை வழக்கு தீர்ப்பு தொடர்பான தகவல்

தேர்தல் ஆட்சேபனை வழக்கு தீர்ப்பு தொடர்பான தகவல்

0

உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்துத்
தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றமும்
மேன்முறையீட்டு நீதிமன்றமும் நாளைய தினத்திற்கு ஒத்திவைத்திருக்கின்றன.

புது வருடத்தை ஒட்டிய நீதிமன்றங்களின் விடுமுறை நாளையுடன் ஆரம்பிப்பதால்
மேற்படி மனுக்கள் தொடர்பான உத்தரவுகளை இரண்டு நீதிமன்றங்களும் பெரும்பாலும்
நாளை விடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனுக்கள் தொடர்பான உத்தரவு

இதுவரை இணக்கம் காணப்பட்ட ரிட் மனுக்கள் தொடர்பான விடயங்கள் தவிர்ந்த
ஏனையவற்றின் மீதான விவாதம் உயர்நீதிமன்றத்தில் இன்று தொடர்ந்து நடைபெற்றது.

இன்று உயர்நீதிமன்றம் ஒவ்வொரு தேர்தல் ஆட்சேபனை மனுவாக எடுத்து ஆராய்ந்தது.

இதேவேளை இந்தத் தேர்தல் ஆட்சேபனைகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சட்டமா
அதிபர் தரப்பு கிளப்பிய பூர்வாங்க ஆட்சேபனை மீதான விசாரணையையும்
உயர்நீதிமன்றம் முடித்துக் கொண்டுள்ளது.

அது தொடர்பான தனது முடிவையும் நாளை
உயர்நீதிமன்றம் தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version