Home இலங்கை அரசியல் தமிழர் தலைநகரில் திறக்கப்பட்ட பொது வேட்பாளரின் தேர்தல் காரியாலயம்

தமிழர் தலைநகரில் திறக்கப்பட்ட பொது வேட்பாளரின் தேர்தல் காரியாலயம்

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்பாளரது திருகோணமலை மாவட்ட தேர்தல் காரியாலயம் இன்று (28) மாலை கடல்முக வீதியில் திறந்துவைக்கப்பட்டது.

தமிழ் தேசிய பொதுக் கூட்டமைப்பின் சார்பாக சங்கு
சின்னத்தில் போட்டியிடும் அரியநேத்திரன்(ariyanenthiran) அவர்களது திருகோணமலை தேர்தல் காரியாலயம் அரசியல் செயற்பாட்டாளர் ஜதீந்திரா, முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி மற்றும் முன்னாள் திருகோணமலை நகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களால் திறந்துவைக்கப்பட்டது.

கிராம மட்டங்களில் தமிழ் பொது வேட்பாளர் குறித்த தெளிவின்மை

நகர் பகுதிகளை விட கிராம மட்டங்களில் தமிழ் பொது வேட்பாளர் குறித்த போதிய தெளிவின்மை காணப்படுவதாகவும் அது தொடர்பில் பொதுமக்கள் மட்டத்தில் தெளிவு படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கிலான பலவகையான செயற்திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில் குறித்த காரியாலயம் செயற்படும் எனவும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

Source: https://ibctamil.com/article/election-office-general-candidate-opened-in-trinco-1724876518

NO COMMENTS

Exit mobile version