ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு (
Sarath Fonseka) விளக்கு சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சின்னமானது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சரத் பொன்சேகாவுக்கு சற்றுமுன்னர் வழங்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை இன்று (15) காலை 9.00 மணிக்கு ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
வேட்பு மனுத்தாக்கல்
இந்தநிலையில், கட்டுப்பணம் செலுத்திய 40 வேட்பாளர்களில் 39 வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickramasinghe) தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/election-symbol-of-sarath-fonseka-1723710461
