அதிபர் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) அல்லது தொழிலதிபர் தம்மிக்க பெரேரா(dhammika perera) அல்லது வேறு எவரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார்கள் என இதுவரை கட்சிக்கு அறிவிக்கப்படவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa), தெரிவித்தார்.
அப்படியொரு விடயத்தை கட்சிக்கு தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரமுனவில் யார் போட்டியிடுவது
அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் யார் போட்டியிடுவது என்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வேட்பாளர் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், உரிய நேரத்தில் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என்றார்.