Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி தேர்தல் 2025 – அவசரமாக கூடும் தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி தேர்தல் 2025 – அவசரமாக கூடும் தேர்தல்கள் ஆணைக்குழு

0

எதிர்வரும் 27 ஆம் திகதி (வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission
) விசேட கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 2 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுமென்றும் தேர்தல் ஆணையர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (SAMAN SRI RATNAYAKE) தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

இதேவேளை, அனைத்து நகராட்சி மன்றங்கள், நகர சபைகள் மற்றும் பிராந்திய சபைகள் பராமரிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கான வர்த்தமானி அறிவிப்பும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வாக்குப்பதிவு ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

NO COMMENTS

Exit mobile version