Home இலங்கை பொருளாதாரம் இலத்திரனியல் வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்

இலத்திரனியல் வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்

0

இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்காக இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கத்தினால் விசேட கணக்காய்வொன்று நடாத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை சபாநாயகர் அசோக ரன்வல கூறியுள்ளார்.

கணக்காய்வு 

இதற்கமைய, 2022 மே 1 முதல் 2023 செப்டம்பர் 15 வரை செயற்படுத்தப்பட்ட அந்த திட்டத்தின் மூலம் இதற்கான அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பாக கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் இலத்திரனியல் வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version