Home இலங்கை சமூகம் குறைக்கப்பட்டது மின்சார கட்டணம் : வெளியானது அறிவிப்பு

குறைக்கப்பட்டது மின்சார கட்டணம் : வெளியானது அறிவிப்பு

0

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) இன்று (17) வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, மின்சாரக் கட்டணத்தை 20 சதவீதத்தினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல் தொடர்பு இயக்குநர் ஜெயநாத் ஹேரத் (Jayanath Herath) தெரிவித்துள்ளார்.

இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

வீடுகளுக்கான மின் கட்டண குறைப்பு 

மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த விலைகள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதுடன் ஆண்டின் முதல் 06 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும். 

அதன்படி, வீட்டுப் பிரிவின் கீழ், 0 முதல் 30க்கு இடைப்பட்ட அலகு மின்சாரம் பயன்படுத்துவோருக்கான கட்டணம் 29 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் 31 முதல் 60 வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கான கட்டணம் 28 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 91 முதல் 180 அலகு வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 18 வீத கட்டணக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளது.

180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 19 வீத கட்டணக் குறைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தெரு விளக்குகளுக்கான கட்டணம்

இதேவேளை பொதுத்துறைக்கு 11வீதம், ஹோட்டல் துறைக்கு 31 வீதம் மற்றும் தொழில்துறை துறைக்கு 30 வீத கட்டணக் குறைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் மத வழிபாட்டுத் தலங்களுக்கு 21வீத மின்சாரக் குறைப்பும் வழங்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

அத்துடன், தெரு விளக்குகளுக்கு 11 வீத கட்டணக் குறைப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version