Home இலங்கை சமூகம் பல தொடருந்து சேவைகள் இரத்து : வெளியான தகவல்

பல தொடருந்து சேவைகள் இரத்து : வெளியான தகவல்

0

தொடருந்து சாரதிகளின் பற்றாக்குறை காரணமாக இன்று (17) பல தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சீரான செயல்பாடுகளுக்கு மொத்தம் 68 தொடருந்து இயக்குனர்கள் தேவை என்பதுடன், 42 இயக்குனர்கள் மாத்திரமே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் 27 பேர் மருத்துவ விடுப்பில் உள்ளதாகவும், 12 இயக்குனர்களுக்கு இரட்டை சேவைகளில் ஈடுபட வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடருந்து சேவைகள் இரத்து

இதன் காரணமாக  சுமார் 25 தொடருந்து சேவைகள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், தொடருந்து இயக்குனர்களை பதவி உயர்வு செய்வதற்கான பரீட்சைக்கு சுமார் 80 சாரதிகள் தோற்றவுள்ளதன் காரணமாக, இன்று பிற்பகலும் சுமார் 15 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.    

NO COMMENTS

Exit mobile version