Home இலங்கை சமூகம் மின்சார கட்டண குறைப்பு: மக்களுக்கு கிடைக்கவுள்ள நிவாரணம்

மின்சார கட்டண குறைப்பு: மக்களுக்கு கிடைக்கவுள்ள நிவாரணம்

0

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ஆணைக்குழு முன்மொழிவை பரிசீலித்து ஒப்புதல் அளித்த பின்னர், மின் கட்டண குறைப்பு தொடர்பான சதவீதம் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சார சபை மூன்றாவது முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.

விலைச் சூத்திரம்

மேலும், மக்களுக்கு கூடுதல் நிவாரணம் அளிக்கக்கூடிய மின் கட்டண முறையை அறிமுகம் செய்யும் நோக்கில் விலைச் சூத்திரம் மீளாய்வு செய்யப்படுவதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, , பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வெற்றிடங்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.   

Source: https://ibctamil.com/article/electricity-tariff-reduction-sri-lanka-1729841680

NO COMMENTS

Exit mobile version