Home இலங்கை சமூகம் உயரப் பறக்கும் பட்டங்கள் மூலமாக மின்சாரம்: கொழும்பு பல்கலைக்கழகம் அறிவிப்பு

உயரப் பறக்கும் பட்டங்கள் மூலமாக மின்சாரம்: கொழும்பு பல்கலைக்கழகம் அறிவிப்பு

0

Courtesy: Sivaa Mayuri

வீட்டு உபயோகத்திற்கு தேவையான மின்சாரத்தை உயரத்தில் பறக்கும் பட்டங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் கொழும்பு பல்கலைக்கழக பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது இந்த மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை பேராசிரியர் ஜயரத்ன அறிவித்தார்.

திருவிழாவின் போது நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

காற்றாலை மூலம் மின்சாரம் 

காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது பொதுவானது என்றாலும், நுவரெலியாவில் இந்த நோக்கத்திற்காக பட்டங்களை பயன்படுத்துவது ஒரு புதிய முயற்சியாகும்.

இந்த யோசனை இலங்கைக்கு புதியது. எனினும் இது ஏற்கனவே அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
அங்கு உயரப்பறக்கும் ஒரு பட்டத்தின் மூலம் குறைந்தது நான்கு வீடுகளுக்கான மின்சாரம் பெறப்படுகிறது என்று பேராசிரியர் ஜயரத்ன கூறியுள்ளார்.

இந்தநிலையில், இலங்கையில் இந்த முயற்சியை முன்னெடுப்பதற்கு, இலங்கை முழுவதும் உள்ள பட்டம் பறக்கவிடும் சங்கங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும்.

இதன்படி, எதிர்காலத்தில் மின்சார உற்பத்திக்கான புதிய முறைகளை அறிமுகப்படுத்த கொழும்பு பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் ஊடாக 500 மீட்டருக்கு மேல் உயரத்தில் பறக்கும் பட்டங்களின் மூலம் வெற்றிகரமாக மின்சாரம் தயாரிக்கமுடியும் என்பதை அண்மைய சோதனைகள் காட்டுகின்றன.

சரியாக இதனை நடைமுறைப்படுத்தினால்;, இந்த திட்;டத்தின் ஊடாக 1,800 டெராவாட் வரை மின்சாரம் தயாரிக்க முடியும் என்று சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version