Home முக்கியச் செய்திகள் மின்சாரப் பயன்பாடு : பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மின்சாரப் பயன்பாடு : பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

நத்தார் மற்றும் புத்தாண்டுப் பண்டிகைக் காலங்களில் மின்சாரம் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மின்சாரப் பயன்பாட்டில் அதீத எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலங்களில் தரமற்ற மின்சார அலங்கார விளக்குகள் மற்றும் மின் உபகரணங்களால் கணிசமான எண்ணிக்கையிலான உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்படுவதாக அந்த ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் வீடுகளிலேயே, பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதால் இத்தகைய விபத்துக்கள் நேரிடுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

‘SLS’ தரச் சான்றிதழ் பெற்ற மின் சாதனங்கள்

இந்த நிலையில் ‘SLS’ தரச் சான்றிதழ் பெற்ற மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பாக, 13A Type-G ரக சதுர ஊசி (Square Pin) செருகிகளை கொண்ட அலங்கார விளக்குகளையே கொள்வனவு செய்ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விளக்குகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அவற்றில் வெட்டுப்பட்ட கம்பிகள், தளர்வான இணைப்புகள் அல்லது சேதமடைந்த மின்காப்பு உறைகள் (Insulation) உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் நீடிப்பு மின்வடம் (Extension cords) அளவுக்கு அதிகமான மின் சாதனங்களை இணைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அத்துடன், மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக மின்சாரம் தாக்கும் அபாயம் அதிகம் என்பதால், வெளிப்புற அலங்காரங்களுக்கு அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மழைத்தூறலைத் தாங்கக்கூடிய விளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version