Home இலங்கை சமூகம் இலத்திரனியல் சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலத்திரனியல் சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலத்திரனியல் சாரதி அனுமதி பத்திரங்களை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க (Ranjith Rupasinghe) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை, இன்றைய தினம் (24) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் அட்டைகள் தட்டுப்பாடு காரணமாக சுமார் எட்டு இலட்சம் பேருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க வேண்டியிருந்தது.

 அனுமதி பத்திரம்

அதில் இதுவரை 91,000 பேருக்கு மாத்திரமே அட்டை வழங்க வேண்டியுள்ளது.

அடுத்த இரண்டு மாதங்களில் அவர்களுக்கும் அட்டைகளை வழங்க முடியும்.

அதில் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை சுமார் இரண்டு லட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் அட்டைகள் வழங்கப்படுவதுடன் அடுத்த ஆண்டு முதல் வழமை போன்று சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை வழங்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version