இலங்கைக்கு வரும் அனைத்து குறுகிய கால சுற்றுலாப் பயணிகளும் மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெற வேண்டும் என்ற முந்தைய அறிவிப்பை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் திரும்பப் பெற்றுள்ளது.
ஒக்டோபர் 15, 2025 முதல் மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெற வேண்டும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அறிவிப்பு வரும் வரை ரத்து
அதன்படி, ஒக்டோபர் 13, 2025 அன்று வெளியிடப்பட்ட முடிவு மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து ETA மற்றும் விசா வழங்கும் சேவைகளும் தற்போதுள்ள நடைமுறைகளின் கீழ் தொடர்ந்து செயல்படும் என்றும் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
எனவே, பயணிகள் ஒக்டோபர் 15, 2025 க்கு முன்பு இருந்த அதே செயல்முறையின் கீழ் விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
