கொழும்பில் ஒரு சில்லறை விற்பனையாளரால் விற்கப்பட்ட மாசுபட்ட குளிர்பானம் காரணமாக, யுவதி ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
கொழும்பின் புறக்கோட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் 19 வயது யுவதி ,குறித்த பானத்தை அருந்தியதாகவும், இதனையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன
எனினும் குறித்த பானம், தமது நிறுவனத்தினுடையது அல்ல என்றும், சுத்தம் செய்யும் இரசாயனம் என்பது தெரியவந்தது.
மனித நுகர்வு
குறித்த சம்பவத்தின்போது, மனித நுகர்வுக்கு ஏற்புடையதற்ற திரவத்தை சேமிக்க,சில்லறை விற்பனையாளர், தமது குளிப்பான வெற்றுப்போத்தலை மீண்டும் பயன்படுத்தியமை விசாரணையில் தெரியவந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவே குறித்த யுவதிக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த பானங்கள் நிறுவனம் தெளிவுப்படுத்தியுள்ளது.