Home இலங்கை அரசியல் ஆனையிறவு பெயரைக் கேட்டதும் அதிரும் அநுர அரசு

ஆனையிறவு பெயரைக் கேட்டதும் அதிரும் அநுர அரசு

0

வடக்கில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள ஆனையிறவு உப்பு தொழிற்சாலை தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

வடக்கின் மிகப்பெரும் உப்பளமாக இருந்து ஆனையிறவு உப்பளம் உள்நாட்டு போரினால் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் ஆனையிறவு உப்பு தொழிற்சாலை நேற்று (29) திறந்து வைக்கப்பட்டது.

இந்தநிலையில், “ஆனையிறவு உப்பு” என்ற அடையாளப் பெயர் “ரஜ லுணு” என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தநிலையில், ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதி செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்தோடு, ஆனையிறவு உப்பு உற்பத்தி தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்க வேண்டிய தேவை இல்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்தார்.

இவ்வாறு இது தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகள் உட்பட மக்கள் வரை பலர் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இது தொடர்பில் விரிவாகவும், அடுத்த கட்டம் தொடர்பிலும் மற்றும் இது குறித்து அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பிலும் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி, 

https://www.youtube.com/embed/Wpn6M98i8f8

NO COMMENTS

Exit mobile version