Home உலகம் கனடா பிரதமரை பெண்ணே என கிண்டலடித்த எலோன் மஸ்க்

கனடா பிரதமரை பெண்ணே என கிண்டலடித்த எலோன் மஸ்க்

0

அமெரிக்காவுடன்(us) கனடாவை (canada)இணைப்பது தொடர்பாக டொனால்ட் ட்ரம்பின்(donald trump) சர்ச்சையான கருத்து தொடர்பில், கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோவை(justin trudeau) எலோன் மஸ்க் (elon musk)பெண்ணே என கிண்டலடித்துள்ளார்.

கனடாவை அமெரிக்காவின் 51 வது மாகாணமாக இணைக்க முனைப்பு காட்டி வரும் டிரம்ப் அதற்காக அந்நாட்டின் மீது பொருளாதார அழுத்தத்தை கொடுப்பேன் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.

ஒருங்கிணைந்த வரைபடம்

அமெரிக்கக் கொடியால் வரையப்பட்ட இரு நாடுகளின் ஒருங்கிணைந்த வரைபடத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ‘கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை’ என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எலோன் மஸ்க் கிண்டல்

இதனையடுத்து, ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த எக்ஸ் பதிவிற்கு எலோன் மஸ்க் கிண்டலாக பதில் அளித்துள்ளார். அதில், “பெண்ணே, இனிமேல் நீங்கள் கனடாவின் ஆளுநராக இருக்க போவதில்லை. ஆகவே நீங்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதாக ஜனவரி 6-ல் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version