Home இலங்கை அரசியல் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகின

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகின

0

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி 17,295 (15) வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சக்தி 7,924 (06) வாக்குகளையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 3,957 (03) வாக்குகளையும் பொதுஜன எக்சத் பெரமுன 2,612 (02) வாக்குகளையும் பெற்றுள்ளன.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு இன்று (26) மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தது.

பதிவான வாக்குகள்

வாக்களிப்பின் நிலவரப்படி 63.4% வாக்குகள் பதிவாகியுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ ஏ. தர்மசிறி தெரிவித்திருந்தார்.

29 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் 1 சுயேட்சைக் குழுவும் இன்று தேர்தலில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, வெளியான தேர்தல் முடிவுகளுக்கமைய,

தேசிய மக்கள் சக்தி – 17,295 வாக்குகள் – உறுப்பினர்கள் 15

ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகள் – உறுப்பினர்கள் 06

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3,957 வாக்குகள் – உறுப்பினர்கள் 03

பொதுஜன எக்சத் பெரமுன – 2,612 வாக்குகள் – உறுப்பினர்கள் 02

சுயேட்சைக்குழு 1 – 2,568 வாக்குகள் – உறுப்பினர்கள் 02

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி – 1,350 வாக்குகள் – உறுப்பினர்கள் 01

தேசிய மக்கள் கட்சி – 521 வாக்குகள் – உறுப்பினர்கள் 01

தெவன பரபுர கட்சி – வாக்குகள் 388 – உறுப்பினர்கள் 00

ஜனசெத பெரமுன – வாக்குகள் 50 – உறுப்பினர்கள் 00  

NO COMMENTS

Exit mobile version