Home இலங்கை அரசியல் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்: அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான தகவல்

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்: அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான தகவல்

0

எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபை (Elpitiya Pradeshiya Saba) தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றையதினம் (14.10.2024) இடம்பெறவுள்ளது.

குறித்த தினத்தில் தமது வாக்குகளை செலுத்த முடியாத தபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி அஞ்சல் மூலம் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகள்

அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களும் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தன.

எனினும் அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவும் தங்களது வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்களுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நேற்றையதினம் (13.10.2024) அஞ்சல் நிலையங்களில் கையளிக்கப்பட்டுள்ளன.

அவை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version