Home இலங்கை அரசியல் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் குறித்து வெளியான வர்த்தமானி

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் குறித்து வெளியான வர்த்தமானி

0

எல்பிட்டிய (Elpitiya) பிரதேச சபைத் தேர்தலை நடத்துவது குறித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த மாதம் 26ஆம் திகதி பிரதேச சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் குறித்த தினத்தில் காலை ஏழு மணி முதல் பிற்பகல் நான்கு மணிவரை வாக்களிப்பு இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல்

இதேவேளை பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 12ஆம் திகதி நிறைவடைந்தது.

அதற்கமைய, 9 அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்திருந்தன. 

இந்த நிலையில் சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Source: https://ibctamil.com/article/elpitiya-pradeshiya-sabha-election-gazette-release-1726384859

NO COMMENTS

Exit mobile version