Home இலங்கை அரசியல் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தியவர்களின் விபரம் வெளியானது

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தியவர்களின் விபரம் வெளியானது

0

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக இதுவரையில் 8 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுவொன்றினால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்காக கடந்த மாதம் 26ஆம் திகதி முதல் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பமானது. இதற்கான கால அவகாசம் எதிர்வரும் 11ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று வரை (10) ஒன்பது கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/elpitiya-pradeshiya-sabha-nomination-filin-1725980957

NO COMMENTS

Exit mobile version