Home முக்கியச் செய்திகள் நாடு முழுவதும் மின்தடை : மக்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு!

நாடு முழுவதும் மின்தடை : மக்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு!

0

நாடு முழுவதும் மின்சாரம் சீராகும் வரை பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை தேசிய நீர்வடிகாலமைப்பு சபை (NWRDB) தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று (09.02.2025) முற்பகல் திடீர் மின் வெட்டு ஏற்பட்டது.

மின் தடை

கொழும்பு பிரதான அமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்னும் ஒரு சில மணித்தியாலங்களில் மின்சாரம் வழமைக்கு கொண்டுவரப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இந்நிலையிலேயே இலங்கை தேசிய நீர்வடிகாலமைப்பு சபை மின்சாரம் மீண்டும் கிடைக்கும் வரை பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறித்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version