Home இலங்கை சமூகம் நுவரெலியா பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நுவரெலியா பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0

நுவரெலியா(Nuwara eliya) செல்லும் சாரதிகள் வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அந்த பகுதியில் இன்று(02.01.2025) காலை முதல் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்லயிலிருந்து நானுஓயா வரையிலும், கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் ரம்பொடயிலிருந்து நுவரெலியா வரையிலும், வாகனங்களை செலுத்தும் போது முன்பக்க விளக்குகளை ஒளிரவிட்டு வாகனத்தை செலுத்துமாறு காவல்துறையினர் சாரதிகளிடம் கோரியுள்ளனர்.

காலநிலை மாற்றம்

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலை நிலவுவதுடன், அப்பகுதி முழுவதிலும் இருண்ட நிலை காணப்படுவதால் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் சில இடங்களில் பனிமூட்டமான காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version