Home இலங்கை அரசியல் தலைதூக்கி நிற்கும் சலுகை அரசியல்: எமில்காந்தன் ஆதங்கம்

தலைதூக்கி நிற்கும் சலுகை அரசியல்: எமில்காந்தன் ஆதங்கம்

0

பொருளாதாரம்,
பாதுகாப்பு மற்றும் பல தேவைகளை அடிப்படையாக கொண்டு இன்று சலுகை அரசியல் தலைதூக்கி
நிற்கிறது என வன்னித் தேர்தல் தொகுதியில் சுயேட்சைக் குழுவேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவித்தவுடன் அனேகமான அரசியல் கட்சிகள் மக்களுக்கு அதை
இதை கொடுத்து வாக்கினைப் பெற முயற்சிக்கின்றன எனவும் கூறியுள்ளார்.

அந்த நிலமையை மாற்ற வேண்டும் எனவும், எமில்காந்தன் கூட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் மாற்றம்

வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (18.10.2024)
இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே
அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த கால கடுமையான காலங்களை எல்லாம் கடந்து மக்களுடைய அபிவிருத்தி மற்றும்
தொழில் ரீதியான வளர்ச்சி கருதி ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து அதன் ஊடாக
கடந்து இரண்டு வருடங்களாக கிராமங்களில் பல வேலைகளை செய்தோம்.

அரசியல் ரீதியாக
ஒரு மாற்றத்தின் இலங்கை நோக்கி பயணித்து வந்தோம். இந்த தேர்தல்
அறிவிக்கப்பட்டதும் எமது கட்சி பதிவு செய்வதற்கு காலம் போதியதாக இல்லாமையால்
சுயேட்சையாக போட்டியிடுகின்றோம்.

இல்லாமை என்பது தலை
தூக்கி நிற்கும் நேரத்தில் இல்லாமையை தீர்ப்பதற்காக வேலை செய்கின்றோம்.

பொருளாதார பாதுகாப்பு

பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் பல தேவைகளை அடிப்படையாக கொண்டு சலுகை
அரசியல் தலைதூக்கி நிற்கிறது. தேர்தல் அறிவித்தவுடன் அனேகமான அரசியல் கட்சிகள்
மக்களுக்கு அதை இதை கொடுத்து வாக்கினைப் பெற முயற்சிக்கின்றன.

அந்த நிலமையை
மாற்ற வேண்டும்.

அரசியல் கட்சி என்ற வகையில் சாராயப் பாவனையை கட்டுப்படுத்தி மது ஒழிப்பை
முன்னெடுப்பதும் எமது கட்சியின் நோக்கமாகும்.

தொழில் அபிவிருத்தி என்பது
அந்ததந்த மாவட்டம் சார்ந்து அங்குள்ள வளங்களை அடிப்படையாகக் கொண்டு
முன்னெடுக்கபட வேண்டும்’’ என்றார்.

NO COMMENTS

Exit mobile version